கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடாத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அந்த படுகொலை நடைபெற்றதான இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர்; வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையை முன்வைத்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இலங்கை ராணுவத்தினராலும். முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது. இந்த படுகொலையில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்ற சார்பில் இந்தப் படுகொலைக்கு விசாரணை வேண்டும் அத்தோடு புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது.
உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரித்து இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை.
இரண்டு ஆணை குழுவில் நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன் ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆனைகுழுவில் சாட்சிகள் தெரிவித்திருந்தேன் ஆனால் இன்றும் நீதி கிடைக்கவில்லை. இதில் நேரடியாக சந்திரிகா அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது.
இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய, கேப்டன் விஜயநாயக்க இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே இந்த படுகொலையை உடனடியாக இந்த புதிய அரசாங்கம் இதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று விசாரணை செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் இந்த படுகொலை தற்பொழுது அந்த முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என்பதனை கேட்டுக்கொண்டு இந்த பாதிக்கப்பட்டவன் எனது அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்காவின் பிள்ளைகள் மூன்றும், அம்மம்மா, என எனது எனது குடும்பத்தில் 10 பேர் படுகொலைசெயய்யப்பட்டுள்ளனர். இதனை சர்வதேசம் விசாரணை செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கேட்டுக் கொள்கின்றோம்.
09.09.1990ஆம் ஆண்டு இந்த படுகொலை எவ்வாறு இடம் பெற்றது என்றால் சத்துருக்கொண்டான் பணிச்சையடி பிள்ளையாரடி கொக்குவில் ஆகிய கிராமங்களில் அந்த நேரம் ஏற்கனவே முஸ்லிம் ஊர் காவல் படையினர்கள் வந்து. எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எல்லாம் புலனாய்வு செய்து அனைத்து மக்களையும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதனால் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.